போட்ஸ்வானாவில் இறந்த 360-க்கும் அதிகமான யானைகளின் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்..

உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் அப்படியே இருந்ததால் அவை வேட்டையாடப்படவில்லை என்பதையும் ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

போட்ஸ்வானாவில் இறந்த 360-க்கும் அதிகமான யானைகளின் உயிரிழப்புக்கு இதுதான் காரணம்..
போட்ஸ்வானா யானைகள்
  • Share this:
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உயிரிழந்த 360-க்கும் மேலான யானைகளின் இறப்புக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் உலகிலேயே மிக அதிகமாக யானைகள் உள்ளன. அங்கு சுமார் 1,30,000 யானைகள் இருந்த நிலையில் போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ என்ற டெல்டா பகுதியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 360-க்கும் அதிகமான யானைகள் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளன. பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பின் இயக்குநர் நியால் மெக்கேன் இந்த யானைகளின் உயிரிழப்பை கண்டுபிடித்து உறுதி செய்தார்.

உயிரிழந்த யானைகளில் பெரும்பாலானவை தங்கள் முகம் முழுவதும் தரையில் விழும் படியும் இறப்பதற்கு முன்பு ஒரே இடத்தில் நீண்ட நேரம் வட்ட வடிவில் நடந்துள்ளதாகவும் இதனால் யானைகளின் நரம்பு மண்டலங்களில் ஏதோ தொற்று தாக்கியிருக்கலாம். உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் அப்படியே இருந்ததால் அவை வேட்டையாடப்படவில்லை என்பதையும் ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.


எனவே யானைகளின் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க அவற்றின் மாதிரிகள் ஆய்வுக்காக தென் ஆப்ரிக்கா, கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது பெரும்பாலான நாடுகளிலிருந்து சோதனை முடிவுகள் வந்துவிட்டதாகவும் யானைகள் அனைத்தும் இயற்கையான நச்சு மூலமே உயிரிழந்துள்ளதாக போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.

 
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading