வங்காள தேசத்தில் படகு விபத்தில் 32 பேர் உயிரிழப்பு

CNN

 • Share this:
  வங்காள தேசத்தில் இரண்டு படகுகள் மோதிக் கொண்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.

  வங்காள தேசத்தின் புரிகங்கா ஆற்றில் முன்ஷிகஞ்ச் பகுதியில் இருந்து 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த படகு எதிர்பாராத விதமாக மற்றொரு படகுடன் மோதிக் கவிழ்ந்தது.

  சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் 3 குழந்தைகள், 8 பெண்கள் உட்பட 30 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் சிலரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

  230 ஆறுகளைக் கொண்ட வங்காள தேசத்தில் போக்குவரத்திற்காக மக்கள் படகுகளையே நம்பியுள்ளனர். பராமரிப்பின்மை, பாதுகாப்புத் தரம் குறைவு, அதிக பயணிகளை ஏற்றுவது உள்ளிட்ட காரணங்களால் அங்கு அடிக்கடி படகு விபத்துகள் நிகழ்வதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

  Also read... முக கவசம் அணியாமல் வந்த பெண்ணுக்கு சேவை மறுப்பு - கடமையை செய்த ஊழியருக்கு ₹ 72 லட்சம் அன்பளிப்பு

  ஆனால் விபத்தில் சிக்கிய படகு செப்டம்பர் மாதம் வரை இயக்குவதற்கான உரிமம் பெற்றிருந்ததாகவும், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்றும் தெரிவித்த அதிகாரிகள், கவனக்குறைவால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: