இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு குறித்து யார் பொறுப்பு என்ற தலைப்பில் வீடியோ பேச்சு ஒன்றை ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் லடாக் எல்லைக்கு நமது வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார் என்றும், இதற்கு யார் பொறுப்பு என்றும் வினவியுள்ளார். இந்திய வீரர்களை கொன்றதன் மூலம், சீனா மிகப்பெரிய தவறிழைத்து விட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
இதனிடையே, ராகுல்காந்தி கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, இந்தியாவின் பொறுப்பற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி என விமர்சித்துள்ளார்.