US SAYS SHIFTING MILITARY FROM EUROPE TO FACE CHINESE THREAT TO INDIA AND SOUTHEAST ASIA VAI
இந்தியாவிற்கு சீனாவால் அச்சுறுத்தல் உள்ளது: மைக் பாம்பியோ
மைக் பாம்பியோ
இந்தியாவிற்கு சீனாவால் அச்சுறுத்தல் இருப்பதால் தான் பசிபிக் பிராந்தியத்திற்கு அமெரிக்க படைகளை அனுப்பியுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்தார்.
பெல்ஜியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொளி காட்சி மூலம் பங்கேற்ற மைக் பாம்பியோவிடம், ஜெர்மனியில் இருந்த அமெரிக்க படைகளை குறைத்தது ஏன் என்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியா, வியட்நாம், இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவால் அச்சுறுத்தல் எழுந்திருப்பதாகக் கூறினார்.
இந்த சவால்களை எதிர்கொள்ள அமெரிக்க படைகள் சரியான நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
ஜெர்மனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படைகளில் பகுதியளவு திரும்பப் பெறப்பட்டதுடன், பசிபிக் பிராந்தியத்தில் தனது போர்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் ஆயுதங்களை அமெரிக்கா களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.