THE CHINA DEFENSE MINISTRY HAS BLAMED THE INDIAN SIDE FOR THE CLASH IN CALVAN VALLEY VIN
கல்வான் மோதலுக்கு இந்திய ராணுவமே காரணம்: சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பேச்சு...
கோப்புப் படம்
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீனப்படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதலுக்கு இந்தியத் தரப்பே காரணம் என சீன ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீனப்படைகளுக்கு இடையே நடைபெற்ற மோதலுக்கு இந்தியத் தரப்பே காரணம் என சீன ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
பீஜிங்கில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் பேசிய ராணுவ அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வு கியான், ஜூன் 6-ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின் போது கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் ஒருதலைப் பட்சமாக இந்திய வீரர்கள் அத்துமீறியதால் மோதல் நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்கும்படி பீஜிங் இந்தியாவிடம் கூறியதாகவும், மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க எல்லைப் படையினரை ஒழுங்குபடுத்துமாறு தெரிவித்ததாகவும் வு கியான் கூறியுள்ளார்.