எல்லையில் முகாம்களை கட்டியுள்ள சீனா - செயற்கைக்கோள் படங்கள்

சீனா தொடர்ந்து கல்வான் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இருநாட்டு ராணுவமும் படைகளை குவித்து வருவதால் லடாக் எல்லையில் பதற்றம் மீண்டும் தொற்றியுள்ளது.

எல்லையில் முகாம்களை கட்டியுள்ள சீனா - செயற்கைக்கோள் படங்கள்
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றால் திங்களென்று எடுக்கப்பட்ட செயற்கைகோள் காட்சி (படம்: AP)
  • Share this:
இந்தியா - சீனா இடையே கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அப்போது சீன தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக செய்திகள் வெளியான போதும், சீனா எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தது.

இந்நிலையில், மோதலில் கர்னல் மட்டத்திலான அதிகாரி உட்பட இருவர் சீன தரப்பில் உயிரிழந்ததாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தெரிவித்தது. இதனிடையே, 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது தவறான செய்தி என்றும், தங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகமில்லை என்றும் சீனா விளக்கமளித்தது. இதன் மூலம் சீனா முதல்முறையாக தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. பதற்றத்தை தணிப்பதற்காகவே உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை என்றும் சீனா கூறியுள்ளது.

இந்நிலையில், கல்வான் ஆற்றில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோட்டின் இருபுறமும் சீன படைகள் நிறுத்தப்பட்டிருப்பது செயற்கைக்கோள் படங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த படங்களில் முன்பு இல்லாத வகையில் சீனாவின் தங்குமிடங்கள் உள்ளிட்ட முகாம்கள் கட்டமைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.


Also see:

மெய்யான கட்டுப்பாட்டு பகுதி 14க்கு அருகிலேயே இந்த கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, மோதல் நடைபெற்ற பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் சீனா படைகளை குவித்துள்ளது. இதையடுத்து மோதல் நடைபெற்ற பகுதியின் அருகே இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது.மேலும் கிழக்கு லடாக் பகுதியில் ராணுவத் தளபதி நரவனே ஆய்வு மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எல்லையில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் அவர் விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கல்வான் பகுதிக்கு தொடர்ந்து உரிமை கோரி வரும் சீனா, இந்திய படைகளே அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. கல்வான் மோதலுக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லிஜியான் தெரிவித்துள்ளார்.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading