எல்லையில் பதற்றம் தணியுமா? லடாக் செல்கிறார் ராஜ்நாத் சிங்

கிழக்கு லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

எல்லையில் பதற்றம் தணியுமா? லடாக் செல்கிறார் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • News18
  • Last Updated: July 2, 2020, 2:15 PM IST
  • Share this:
இந்திய சீன கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கிழக்கு லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து எல்லையில் இருநாட்டு ராணுவமும் படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றன. எல்லையை வான்வழியாக கண்காணிக்கும் பணியிலும் இருநாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.


இந்நிலையில் எல்லையில் சீனா 20ஆயிரம் துருப்புகளை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பதற்றத்தை தணிக்க இருநாட்டு கமாண்டர்கள் மட்டத்திலான 3வது கட்ட பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமார் 12 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் படைகளை திரும்பப்பெறுவது குறித்தும், பதற்றத்தை தணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. படிப்படியாக படைகளை திரும்பப்பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது மெய்யான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. எனினும் படைகளை திரும்பப்பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் காலங்களில் ராணுவ மற்றும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பேச்சுவார்த்தைகள் எல்லையில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, கிழக்கு லடாக்கில் உள்ள லே பகுதிக்கு வரும் வெள்ளிக்கிழமை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்கிறார். பாதுகாப்பு அமைச்சருடன் ராணுவத்தளபதி மனோஜ் முகுந்த் நரவனேவும் பயணம் மேற்கொள்கிறார். மெய்யான எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் சீனா அத்துமீறி வரும் நிலையில், இருவரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading