சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெய்போவில் இருந்து வெளியேறிய மோடி
சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் (Weibo) இருந்து பிரதமர் நரேந்திரமோடி வெளியேறியுள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி
- News18 Tamil
- Last Updated: July 2, 2020, 1:46 PM IST
சீன மக்களிடையே பிரபலமான சமூக ஊடகத் தளமாக வெய்போ இருந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த தளத்தில் உறுப்பினராக இருந்த மோடி, புத்தாண்டு போன்ற விழாக்காலங்களிலும், முக்கிய நிகழ்வுகளிலும் வாழ்த்து தெரிவிப்பது, கருத்துகளை பதிவிடுவது என இயங்கி வந்தார்.
இந்த தளத்தில் இரண்டு லட்சம் பேருக்கு மேற்பட்டோர் பிரதமர் மோடியைப் பின் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் லடாக் எல்லையில் இந்திய - சீன வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் சீன செயலிகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
Also read... போலியான முகவரியால் குழப்பம்... கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்..
இந்த சூழலில் சீன சமூக ஊடகத் தளமான வெய்போவில் இருந்து மோடி வெளியேறியுள்ளார்.