எல்லையில் அத்துமீறும் சீனா.. கூகுளில் தேடி சீனத் தயாரிப்புகளை நிராகரிக்கும் இந்தியர்கள்...

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி வருவதால் அந்நாட்டு தயாரிப்புகளை நிரகரிக்க இந்தியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

  • Share this:
    லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதையடுத்து இந்தியாவில் பயன்படுத்தப்படும் சீன பொருட்கள், சீனாவின் செயலிகள், சீன பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூகுளில் அதிகம் பேர் தேடி உள்ளனர்.

    சீன ராணுவம் எல்லையில் அத்துமீறுவதை தொடர்ந்து சீன செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வலுத்தது, சீன செயலிகளை நீக்கும் புதிய செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த ஆப்பை பயன்படுத்தி பலர் சீன செயலியை நீக்கி வந்தனர்.

    லடாக்கில் சீனாவின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தையடுத்து சீன பொருட்களை தவிர்க்குமாறு பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்தியாவில் பயன்படுத்தப்படும் சீனாவின் பொம்மைகள், ஆடை உபகரணங்கள், சமையலறை பொருட்கள், வாட்ச், எலக்டரானிக்ஸ் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் இவற்றை நிராகரிக்கத் தொடங்கி உள்ளனர்.

    மேலும் பார்க்கவும்:-

    வாகனங்களில் சுற்றித் திரிந்தால்... ஊரடங்கு மீறல் நடவடிக்கை குறித்த சென்னை காவல்துறையின் அறிவிப்புகள்..

    இந்தியாவில் ஐந்தில் நான்கு ஸ்மார்ட்ஃபோன் ( சியோமி, விவோ, ரியல்மீ மற்றும் Oppo ) ப்ராண்டுகள் சீனாவைச் சேர்ந்தது. சீன செயலிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் பலர் டிக் டாக் செயலியை நீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Vijay R
    First published: