லடாக் எல்லையில் இந்தியா - சீனா வீரர்களிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இருநாட்டு ராணுவ கமான்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சூஷூல் பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், முதல் கட்ட படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் குறித்தும், அடுத்த கட்ட படைகள் வாபஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
எல்லையில் அமைதியை தொடர்ந்து நிலைநாட்டுவது என்றும், இருநாடுகளிடையிலான ராணுவ மற்றும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தையை தொடர்வது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.