ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட 89 ஆப்ஸ்களை நீக்குமாறு ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு..

இந்திய ராணுவம், ஸ்மார்ட்ஃபோனில் இருந்து 89 செயலிகளை நீக்க வேண்டும் என்று ராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உட்பட 89 ஆப்ஸ்களை நீக்குமாறு ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு..
மாதிரிப் படம்
  • Share this:
இந்திய ராணுவம், ஸ்மார்ட்ஃபோனில் இருந்து 89 செயலிகளை நீக்க வேண்டும் என்று ராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய- சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன.

இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் முகநூல், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டு ரகசியத் தகவல்கள் கசிவதைத்  தடுக்க முகநூல், டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், யுசி பிரசெர் மினி, ஷூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவ வீரர்கள் தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசெர், ஹலோ சாட் உள்ளிட்ட 59 சீன ஆப்ஸுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


















First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading