கடல், தரை & வான்வெளி - சீனா மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தும் இந்தியா

எல்லையில் சீனாவின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்திய ராணுவத்திற்கு மத்திய அரசு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும், ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடல், தரை & வான்வெளி - சீனா மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தும் இந்தியா
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: June 22, 2020, 7:06 AM IST
  • Share this:
லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்கியதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாத நிலையில், எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர். அப்போது தரை, வான்வெளி மற்றும் கடல் எல்லைகளில் சீனாவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சீனா எல்லையில் அத்துமீறும் போது பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீனாவின் எத்தகைய அத்துமீறலையும் எதிர்கொள்ள ஆயுதப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய - சீன எல்லைப்பகுதியில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு துப்பாக்கிகளை பயன்படுத்த வீரர்களுக்கு கட்டுப்பாடு கிடையாது என்றும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படிக்கஎல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரை யாருக்குமே பாதுகாப்பில்லை - உலக சுகாதார அமைப்பு

படிக்கஜூன் 21 VS மாயன் காலண்டர்... இணையத்தை கலக்கும் மீம்ஸ்!


இதனிடையே, இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்னையைத் தீர்க்க இரு நாடுகளுடனும் அமெரிக்கா பேசி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், இது ஒரு கடினமான சூழ்நிலை என்றும், இந்தியா, சீனா இரு நாடுகளும் தற்போது பெரிய பிரச்னையில் இருப்பதாகவும் கூறினார்.

ஜப்பான் டைம்ஸ் ஏட்டில் வெளியாகியுள்ள கட்டுரையில், சீனாவின் ஆவேச போக்கை தடுப்பதில் இந்தியாவின் கொள்கை தோல்வியடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடியை சரண்டர் மோடி என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய பிபி 14 பகுதி இந்தியா வசமே உள்ளதாக மத்திய அமைச்சர் விகே சிங் கூறியுள்ளார். சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை விடுவித்தது போலவே, சீன வீரர்களை இந்தியா விடுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கல்வான் மோதலில் சீன வீரர்கள் 40 பேர் உயிரிழந்ததாக கூறியுள்ள விகே சிங், 1962ல் நடைபெற்ற போரின் போதும் சீனா உயிரிழப்புகளை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading