கல்வான் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நேற்று முன் தினம் சுமார் 12 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்ததாகவும், எல்லையில் இருந்து இருநாட்டு படைகளையும் திரும்பப் பெற முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அடுத்த கட்டமாக இரு நாட்டு இணை செயலாளர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.