INDIA CHINA MUTUAL ACTION TO WITHDRAW TROOPS FROM THE BORDER VAI
இந்தியா - சீன எல்லையில் இருநாடுகள் பரஸ்பரம் படைகளை திரும்பப்பெறும் முயற்சிகள் தீவிரம்..
ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனப்படைகள்
கல்வான் பள்ளத்தக்கில் இருந்து படைகளை திரும்பப் பெற இரு நாடுகளும் பரஸ்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீன படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இருநாட்டு கமாண்டர்கள் மட்டத்தில் 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இருப்பினும் பாங்காங் லேக்கின் வடக்கு பகுதியில் இருந்து சீன படைகள் வெளியேறாமல் உள்ளன.
இந்நிலையில், சீன ராணுவ தலைமை தளபதி சி குவியை சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, எல்லை பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த மிஸ்ரி, படைகளை திரும்பப் பெற இரு நாடுகளும் பரஸ்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனிடையே, கல்வான் பகுதியில் ஜூன் 15-ஆம் தேதி ஊடுருவிய சீன படையை எதிர்த்து நள்ளிரவில் 20 மணி நேரம் வரை கடுமையாக போரிட்டதாக இந்தோ - திபெத் எல்லை படை விளக்கமளித்துள்ளது.