யாருடைய கோழைத்தனம் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிக்க அனுமதித்தது? - ராகுல் காந்தி கடும் விமர்சனம்

ராகுல் காந்தி

யாருடைய கோழைத்தனம் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிக்க அனுமதித்தது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடியை தவிர மற்ற அனைவருக்கும் இந்திய ராணுவத்தின் வீரமும், திறமையும் தெரியும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்து இருந்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில், ராணுவத்தின் வீரமும், திறமையும் பிரதமரைத் தவிர அனைவருக்கும் தெரியும் என விமர்சித்துள்ளார்.



    மேலும், யாருடைய கோழைத்தனம் இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிப்பதை அனுமதித்ததோ, அவர்களுடைய பொய்களே ஆக்கிரமிப்பு நிலத்தை சீனாவே வைத்துக்கொள்ள உதவுகிறது என்றும் மோடியை ராகுல் காந்தி சாடியுள்ளார்.
    Published by:Rizwan
    First published: