இந்தியா - சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் - இந்திய ராணுவம்

இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் - இந்திய ராணுவம்
இந்தியா - சீனா
  • Share this:
கல்வான் எல்லையில் இந்தியா - சீனா இடையே போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மத்தியில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் அமைந்துள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து இருதரப்பு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும், கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பிரச்னைக்குரிய இடங்களில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் ராணுவம் விளக்கமளித்துள்ளது.

Also see:இதனிடையே, டெல்லியில் இருந்து ராணுவ தலைமை தளபதி நரவனே விமானம் மூலம் லே புறப்பட்டுச் சென்றார். அங்கு இரு நாட்கள் தங்கி படைகளின் ஆயத்த நிலை மற்றும் இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை பற்றி ஆய்வு செய்ய உள்ளார்.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading