இந்திய படை வீரர்கள் உயிரிழப்பு குறித்த தகவல்களை அரசு இதுவரை தெரிவிக்காதது ஏன்? - ப.சிதம்பரம் கேள்வி

நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா? கோடிக்கணக்கான நாள் வேலை பார்ப்பவர்கள், சுய வேலை பார்ப்பவர்கள் திடீரென்று வேலை இழந்தார்களே - சரியான முடிவா?

  • Share this:
    இந்திய படை வீரர்கள் உயிரிழப்பு குறித்த தகவல்களை அரசு இதுவரை தெரிவிக்காதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு தொடர்பாக ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில், ‘சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?

    இந்திய படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    Published by:Rizwan
    First published: