கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரின் படைகள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதால் தீவிர கண்காணிப்பு மற்றும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 5ம் தேதிக்கு பிறகு இந்திய-சீன எல்லை மற்றும் கல்வானில் சீன ராணுவத்தின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளதாக கூறியுள்ள அந்த அமைச்சகம், ஏற்கனவே ஜூன்15-ம் தேதி நடந்த மோதலில் இருதரப்பு வீரர்களும் உயிரிழந்ததாக கூறியுள்ளது.
மேலும் 2 கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டாலும், படைகளை பின்வாங்குவது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கும் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.