டெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

கோப்புப்படம்

China |

  • Last Updated :
  • Share this:
    சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.

    இந்த சோதனையில் 40 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதும், அவற்றின் மூலம் 1000 கோடி ரூபாய் வரை பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதும் தெரியவந்தது.





    இந்த மோசடிகளில் வங்கி ஊழியர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு தொடர்பு இருப்பது சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

     
    Published by:Sankar
    First published: