இந்திய எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது எப்படி? மத்திய அரசுக்கு சோனியா காந்தி கேள்வி

சோனியா காந்தி

  • Share this:
    இந்திய எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது எப்படி என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    எல்லையில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறித்தும், எல்லையில் தற்போதைய நிலை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாட்டு மக்களுக்கு மத்திய அரசு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



    எந்தெந்த பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று கேட்டுள்ள சோனியா காந்தி, ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    Also read... லடாக் மோதல் - முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மீண்டும் ஆலோசனை
    Published by:Vinothini Aandisamy
    First published: