இந்தியா-சீனா எல்லையில் பதற்றம்: பாங்காங் டிஸோ ஏரிக்கு அதிவேக இடைமறித்து தாக்கும் படகுகளை அனுப்ப திட்டம்..

இந்திய - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாங்காங் டிஸோ ஏரிக்கு ஆயுதங்கள் நிரப்பப்பட்ட அதிவேக இடைமறித்து தாக்கும் படகுகளை அனுப்ப பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்தியா-சீனா எல்லையில் பதற்றம்: பாங்காங் டிஸோ ஏரிக்கு அதிவேக இடைமறித்து தாக்கும் படகுகளை அனுப்ப திட்டம்..
பாங்காங் டிஸோ ஏரி
  • Share this:
இந்தியா - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், பதற்றம் நீடித்து வருகிறது.  கிழக்கு லடாக் பகுதியில் பாங்காங் டிஸோ ஏரி கடல்மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 900 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பாங்காங் டிஸோ ஏரிப்பகுதியில், இந்திய - சீனா வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஃபிங்கர் 4 முதல் பிங்கர் 8 வரையிலான 8 கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்து கொண்டது. உயரமான பகுதிகளை கைப்பற்றிய சீனா அப்பகுதியில் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்து வலுவூட்டும் நடவடிக்கையில் ஈடுப்பட்டது  மேலும் இந்திய படைகள் ஃபிங்கர் 8 பகுதி வரை ரோந்து பணியில் ஈடுபடுவதையும் சீனா தடுத்துள்ளது.

இந்த பின்னணியில் தான் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாங்காங் ஸோ ஏரியில் ரோந்து பணியை தீவிரப்படுத்துவதற்காக அதிவேக இடைமறித்து தாக்கும் படகுகளை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஏரியில் 2012ஆம் ஆண்டில் இருந்து 17 குயிக் ரியாக்சன் டீம் எனப்படும் QRT படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.  அதற்கு முன்பு இந்தியா சாதாரண படகுகளை கொண்டே ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தது.


அப்போது சீன ராணுவத்தினர் தங்கள் சக்திவாய்ந்த படகுகள் மூலம் இந்திய படகுகளை முடக்கி வந்தனர். அதைத்தொடர்ந்தே QRT படகுகள் பாங்காங் ஏரியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் தற்போது இதைவிட அதிக திறன்கொண்ட படகுகளின் தேவை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் அதிக திறன்கொண்ட 928 பி எனப்படும் படகுகளை பயன்படுத்தி சீன ராணுவம் ரோந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்தே அதிவேக இடைமறித்து தாக்கும் படகுகளை பாங்காங் டிஸோ ஏரிக்கு கொண்டு செல்லும் திட்டம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த படகுகளை உயரமான பகுதிக்கு கொண்டு செல்வது கடினம் என்பதால், C-17 Globemaster-III விமானத்தின் மூலம் லே பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பாங்காங் டிஸோ ஏரிக்கு கொண்டு செல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

திபெத்தில் இருந்து இந்தியா வரை 134 கிலோ மீட்டர் நீளத்துக்கு பாயும் பாங்காங் ஏரியின், மூன்றில் இரண்டு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத்தளபதி மனோஜ் முகுந்த் நரவனே ஆகியோர், லே பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading