பின்வாங்கினாலும் நகராத சீனாவின் ஆயுத வாகனம் - இந்தியாவின் புதிய திட்டம்

எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், இந்திய, சீன ராணுவ வீரர்கள், 2 கிலோமீட்டர் தூரம் வரை பின்வாங்கியுள்ளனர்.

பின்வாங்கினாலும் நகராத சீனாவின் ஆயுத வாகனம் - இந்தியாவின் புதிய திட்டம்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: July 7, 2020, 7:54 AM IST
  • Share this:
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ ஆகியோர் காணொலி மூலம் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், இந்திய, சீன ராணுவ வீரர்கள், 2 கிலோமீட்டர் தூரம் வரை பின்வாங்கியுள்ளனர்.

லடாக் எல்லையில் உள்ள கல்வாண் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் 15-ம் தேதி நடைபெற்ற மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, எல்லையில் பதற்றம் நிலவியதால், இருதரப்பும் படைகளை குவித்து வந்தன. பிரச்சினைக்கு தீர்வுகாண இருதரப்பு கமாண்டர் மட்டத்தில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


லடாக் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, எல்லையை விரிவாக்கம் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இந்தியாவும், சீனாவும் லடாக் எல்லையிலிருந்து படைகளை திரும்பப் பெற்றுள்ளன. மோதல் நடைபெற்ற கல்வாண் பகுதி மட்டுமன்றி, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா ஆகிய பகுதிகளிலும் படைகள் பின்வாங்கியுள்ளன. இருதரப்புமே தற்காலிக கூடாரங்களையும் அகற்றியுள்ளன.

பிரதமரின் பயணத்தைத் தொடர்ந்து, 48 மணிநேரமாக நடைபெற்ற தூதரக மற்றும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையை அடுத்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனப் படையினர் தங்களது கூடாரங்கள், வாகனங்கள் ஆகியவற்றுடன் ஒன்று முதல் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை பின்வாங்கியுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்
LINE OF ACTUAL CONTROL எனப்படும் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் இருதரப்புக்கும் நடுநிலையான பகுதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், கல்வாண் ஆற்றுப் பகுதியில் சீனாவின் கனரக ஆயுதங்களுடனான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனை கண்காணித்து வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் அத்துமீறல்கள் தொடர்ந்துவரும் நிலையில், லடாக் பிராந்தியத்தில் கூடுதலாக 30 ஆயிரம் வீரர்களை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. எல்லைப் பதற்றம் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் என்று மூத்த ராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே, வீரர்கள் பயன்படுத்துவதற்காக கடும் குளிரை தாங்கும் வகையிலான கூடாரங்களை வாங்குவதற்கு இந்திய ராணுவம் ஆர்டர் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading