Fact Check : ஆணி பதித்த இரும்பு ராடை பயன்படுத்தி சீன வீரர்கள் இந்திய ராணுவத்தினரை தாக்கினார்களா?

சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படம்

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஆணி பதித்த இரும்பு ராடை சீன ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என்று சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலானது.

  • Share this:
    லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஆணி பதித்த இரும்பு ராடை சீன ராணுவத்தினர் பயன்படுத்தினார்கள் என்று சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வைரலானது.

    இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. ஆனால் இதன் உண்மைத்தன்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா டிவி வெளியிட்டுள்ள செய்தியில் , இந்த புகைப்படம் குறித்து இந்திய ராணுவத்தின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளனர். அதில் அந்த புகைப்படம் போலி, அதுபோன்று எதுவும் நடைபெறவில்லை“ என்று விளக்கமளித்துள்ளனர்.

    இதனிடையே இந்திய வீரர்கள் உயிரிழப்பு குறித்து டிவிட்டரில் வீடியோ பேச்சு ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில் நமது வீரர்களை எல்லைக்கு ஆயுதமின்றி அனுப்பியது யார் என்றும்,வீரர்கள் உயிரிழப்புக்கு யார் பொறுபேற்பது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ராகுல்காந்தியின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எல்லையில் இருக்கும் படைவீரர்கள் எப்போதும் ஆயுதங்களை வைத்திருப்பர் என்றும், குறிப்பாக நிலைகளை விட்டு விலகும் போது அவர்களிடம் ஆயுதம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் வழக்கத்தின்படியே துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். 1996 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் படியே, இரு நாடுகளும் இந்த நடைமுறையை பின்பற்றவதகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published: