இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

கோப்புப் படம்

  • Share this:
    இந்திய - சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதற்காக, இருதரப்பு ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறவுள்ளது.

    கடந்த மே மாதம் 5-ம் தேதி தொடங்கிய பதற்றம், கடந்த வாரம் கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் மூலம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ள நிலையில், சீன தரப்பில் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை.

    Also read... தவறான தகவல்கள் அளிப்பது ராஜதந்திரம் ஆகாது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

    இந்தநிலையில், லடாக்கில் தொடர்ந்து வரும் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சீன எல்லைக்கு உட்பட்டுள்ள மோல்டோ பகுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    Published by:Vinothini Aandisamy
    First published: