மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதையடுத்து, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் இருந்து 59 செயலிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்த டிக் டிக் செயலியும் முடக்கப்பட்டுள்ளதால் பயனாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.