லடாக் மோதல் - முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் மீண்டும் ஆலோசனை

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

  • Share this:
    ஆலோசனையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா தரப்பில் எடுக்கப்படும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் பற்றியும், இந்திய-சீன எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது குறித்தும் ராஜ்நாத் சிங் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, எல்லை மோதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய வீரர்களில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

    சீன தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இந்திய வீரர்கள் உடனான மோதலில் சீன ராணுவ கமாண்டிங் அதிகாரி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், உயிரிழப்பு தொடர்பாக சீனா இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

    Also read... முழு ஊரடங்கால் செங்கல்பட்டிலிருந்து திருச்சிக்கு ரயில் சேவை ரத்து
    Published by:Vinothini Aandisamy
    First published: