கல்வான் எல்லைப் பகுதியில் இருந்த தற்காப்புக் கலை வீரர்கள் - எழும் புதிய சந்தேகங்கள்

ஆயுதங்களை உபயோகிக்க முடியாத இடத்தில் சீனா தற்காப்புக் கலை பயிற்சி வீரர்களைப் பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

கல்வான் எல்லைப் பகுதியில் இருந்த தற்காப்புக் கலை வீரர்கள் - எழும் புதிய சந்தேகங்கள்
கோப்புப்படம்
  • Share this:
கடந்த 15ம் தேதி இந்தியா - சீனா வீரர்கள் மோதிக்கொண்டதற்கு சற்று முன்னதாக மற்றொரு எல்லைப் பகுதியில் தற்காப்புக் கலை வீரர்களைக் கொண்ட சீனாவின் புதிய படைப்பிரிவு இருந்தது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதி நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் சீன படைவீரர்களால் கொல்லப்பட்டனர். சீன தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில் இரு நாடுகளும் 1996ல் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த பகுதியில் ஆயுதங்களையோ, வெடிபொருட்களையோ பயன்படுத்தக் கூடாது. அதனால் இந்த மோதலில் இரும்பு ராடுகளும், கற்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன.

Also see:



இந்த மோதல் நிகழ்ந்த சற்று நேரத்திற்கு முன்பு அங்கிருந்து 1,300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திபெத்தின் லாசாவில் சீன ஆயுதப் படையின் பிரிவில் தற்காப்புக் கலை வீரர்கள் உள்ளிட்டோருடன் 5 புதிய படைப்பிரிவுகள் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் எவரெஸ்ட் சிகர ஒலிம்பிக் ஜோதி ஓட்ட வீரர்கள், தற்காப்புக் கலை வீரர்கள், மலையேற்ற வீரர்கள் உள்ளிட்டோர் இருந்ததாக சீனாவின் தேசிய பாதுகாப்பு செய்தி பத்திரிகை தெரிவித்துள்ளது. புதிய படைப்பிரிவின் அணிவகுப்பை சீன தொலைக்காட்சியான சிசிடிவியும் ஒளிபரப்பியுள்ளது.

இதில், என்போ பைட் கிளப் வீரர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சீனப் படையின் திபெத் கமேண்டர் வாங் ஹைஜியாங் தெரிவித்துள்ளார். WWE பாணியிலான சண்டையிட வீரர்களுக்கு பயிற்சி தருவதே இந்த என்போ பைட் கிளப்பின் பணி. சர்வதேச போட்டிகளுக்கு வீரர்களை இந்த கிளப் தயார் செய்து அனுப்பி வருகிறது.இந்த வீரர்கள் இந்திய எல்லையில் இருக்கும் சீன ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பார்களா என்பது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், ஆயுதங்களை பயன்படுத்த முடியாத இடத்தில் தற்காப்புக் கலை பயிற்சி வழங்கி வீரர்களை பலப்படுத்த இவர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஜூன் 15 மோதலுக்கு சற்று முன்னதாக இந்திய எல்லைப் பகுதியில் இவர்களின் படைப்பிரிவு இருந்ததும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அமைகிறது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading