இந்தியாவில் முதலீடு செய்ய உள்துறையின் அனுமதிக்காக காத்திருக்கும் 200 சீன நிறுவனங்கள்

இந்தியாவில் முதலீடு செய்வதற்காக சீனாவை சேர்ந்த 200 நிறுவனங்கள் மத்திய உள்துறை அமைச்சக அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்ய உள்துறையின் அனுமதிக்காக காத்திருக்கும் 200 சீன நிறுவனங்கள்
இந்தியா - சீனா
  • News18
  • Last Updated: July 27, 2020, 3:17 PM IST
  • Share this:
கொரோனா பெருந்தொற்றால் தொழில்துறை முடங்கியுள்ள நிலையில், இந்திய நிறுவனங்களை வெளிநாட்டினர் கையகப்படுத்துவதை தடுப்பதற்காக மத்திய அரசு அந்நிய முதலீடு கொள்கையில் ஏப்ரல் மாதம் திருத்தங்களை கொண்டு வந்தது.

இதன்படி, இந்தியாவுடன் நிலப்பரப்பை பகிர்ந்து கொள்ளும் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்பட்சத்தில் மத்திய உள்துறை அமைச்சக அனுமதியை பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை 200 சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில், ஒரு நிறுவனத்திற்கு கூட உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

படிக்க: கொரோனா உறுதியான 3,338 பேரைக் கண்டறிய முடியாமல் திணறும் பெங்களூரூ மாநகராட்சி

படிக்க: சென்னையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி - தற்கொலை என நாடகமாடியது அம்பலம்படிக்க: நானும், 82 வயது எனது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் - அனுபவம் பகிரும் விஷால் வீடியோ
சீன நிறுவனங்களின் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதில் காலதாதம் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பல நிறுவனங்கள் முதலீடு செய்யும் முடிவை திரும்பப் பெறும் என்று கூறப்படுகிறது.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading