சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நடவடிக்கை இந்தியாவின் சந்தை போட்டிக்கும், நுகர்வோர் நலனுக்கும் உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் நடவடிக்கை ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாகவும், இதனை உறுதியாக எதிர்ப்பதாகவும் சீனா கூறியுள்ளது. இந்தியாவின் நடவடிக்கை வெளிப்படைத் தன்மைக்கு எதிரானதாகவும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் செயல் என்றும் சீனா விமர்சித்துள்ளது.