BSNL ல் 4ஜி அப்கிரேட்ஷனுக்கு சீன கருவிகளை பயன்படுத்த மத்திய அரசு தடை

Phones

பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதால் சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாமென்று பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திற்கு கூற மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • Share this:
    பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதால் சீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டாமென்று பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திற்கு கூற மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலில் 20 இந்தய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து இந்தியாவில் சீனா தயாரிப்பு பொருட்களை நிரகாரிக்க பலர் முடிவு செய்துள்ளனர்.

    இதனிடையே அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் சீன உபகரணங்களுக்கு 4ஜி மேம்பாட்டை நிரகாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சீன தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டாமென்று மத்திய அரசு தெரிவித்துள்தாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஐந்தில் நான்கு ஸ்மார்ட்ஃபோன் ப்ராண்டுகள் சீனாவைச் சேர்ந்தது. சியோமி, விவோ, ரியல்மீ மற்றும் Oppo ஆகியவை ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட்ஃபோன் சந்தையின் 76% ஆக்கிரமித்துள்ளது.

    மேலும் பார்க்க:-

    போர் புரியும் தூதர்களை அடக்குவதா? மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு எதிராக பாயும் வழக்குகள்.. உச்சநீதிமன்றம் கண்டனம்

    லெஃப்டிமெண்ட் ஹெனரல் தீபேந்திர சிங் ஹூடா, பி.எஸ்.என்.எல் 60% சார்பைக் கொண்டுள்ளது. சீனாவின் உட்கட்டமைப்பை நம்பியுள்ள நாம், உள்நாட்டு உற்பத்தி அதிகமாக கவனம் செலுத்தவேண்டிய நேரமிது என தெரிவித்துள்ளார்.

     
    Published by:Gunavathy
    First published: