சீனா மீது நடத்தப்பட்டுள்ள ’டிஜிட்டல் தாக்குதல்’ - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

லடாக் மோதலைத் தொடர்ந்து சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது ஒரு டிஜிட்டல் தாக்குதல் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சீனா மீது நடத்தப்பட்டுள்ள ’டிஜிட்டல் தாக்குதல்’ - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத்
  • Share this:
லடாக் மோதலைத் தொடர்ந்து டிக்டாக், ஷேர்இட், ஹெலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது குறித்து கூறிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அதை ஒரு “டிஜிட்டல் தாக்குதல்” என வர்ணித்துள்ளார்.

சீன செயலிகள் மீதான தடை குறித்து மேலும் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம் இந்தியர்களின் தகவல்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளது என்றார். இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில், சீன தரப்பில் இரட்டிப்பு மடங்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளின் மூலம் அமைதியை ஏற்படுத்தவே இந்தியா விரும்புவதாகவும், ஆனால் இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த நினைத்தால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறினார்.


Also see:

மேலும், ”அன்றாடம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கிறது. தற்சமயம் வேற்றுமையை விடுத்து ஒன்றுபட்டு பிரச்னையைக் கையாள வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீன அரசிடமிருந்தும் தூதரகத்திலிருந்தும் நிதி பெற்றதற்கு தன்னிடம் ஆவணம் உள்ளதாகக் கூறியுள்ளார்.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading