லடாக் நிலவரம் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

லடாக் எல்லையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.

லடாக் நிலவரம் தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
(கோப்புப்படம்)
  • Share this:
டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவனே, கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தலைமை தளபதி பதூரியா ஆகியோர் கலந்துகொண்டு எல்லை பகுதியில் ராணுவத்தின் தயார் நிலை பற்றி எடுத்துரைத்தனர்.

அப்போது, இந்திய எல்லையில் கட்டுமானப் பணிகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தாலும் அந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும், எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படியும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.Also read... சிறப்புக் கட்டுரை: வெறுத்தவர்களையும் வென்றவர் ‘விஜய்’! #HBDTHALAPATHYVijay

மேலும், எல்லையில் சூழ்நிலைக்கு ஏற்ப ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை பயன்படுத்திக் கொள்வது பற்றியும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இன்று ரஷ்யா புறப்பட்டுச் செல்ல இருக்கும் நிலையில், ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading