சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை - எல்லையில் அமைதி திரும்ப ஆலோசனை

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எல்லையில் முழு அமைதி திரும்புவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை - எல்லையில் அமைதி திரும்ப ஆலோசனை
அஜித் தோவல், வாங் ஈ.
  • Share this:
எல்லையில் சீனப் படைகள் பின்வாங்குவதற்கு முன்னதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஈ ஆகியோர் காணொலியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், எல்லையில் முழுமையாக அமைதி திரும்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும், ஆழமான கருத்துப் பரிமாற்றங்களுடனும் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see: 
ஜூன் 3 அன்று லடாக் சென்ற பிரதமர் நரேந்திர மோடி கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், நாட்டை விரிவாக்கம் செய்வதற்கான காலம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சிக்கான காலகட்டம். விரிவாக்கம் செய்வதில் பிடிவாதமாக இருப்பவர்கள் உலக அமைதிக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading