16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகள் - ‘மாஸ்டர்’ டீசர் சாதனை

Youtube Video

மாஸ்டர் டீசருக்கு 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகள் கிடைத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசரில் விஜய் ஜேடி என்ற பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் விஜய் படத்துக்கே உரித்தான ஸ்டைலான அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

விஜய் சேதுபதியுடன் நேருக்கு நேர் விஜய் மோதுவது போன்ற காட்சியுடன் டீசர் நிறைவடைந்திருப்பதால் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.அதேபோல் டீசருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைபிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாகவும், 1.6 மில்லியன் லைக்ஸ்களைப் பெற்றிருப்பதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக லைக்ஸ்கலைப் பெற்ற டீசர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து #MostLikedMasterTeaser என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் விஜய்யின் தீவிர ரசிகர்கள்.
Published by:Sheik Hanifah
First published: