மாஸ்டர் எப்போது ரிலீஸ்... வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த ஆறுதல் அப்டேட்!

மாஸ்டர் பட போஸ்டர்
- News18 Tamil
- Last Updated: April 9, 2020, 2:46 PM IST
இன்று மாஸ்டர் திரைப்படம் வெளியாகவில்லை என்ற வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு படக்குழு ஆறுதல் வார்த்தைகளை கூறியுள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்திரைப்படத்தை இன்று (ஏப்ரல் 9) வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் படத்தை குறித்த தேதியில் ரிலீஸ் செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று படம் திரைக்கு வராத நிலையிலும் #MASTERFDFS என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் விஜய்யின் தீவிர ரசிகர்கள். இதுஒருபுறமிருக்க திரையரங்க உரிமையாளர்களும் இன்று மாஸ்டர் திரைக்கு வந்திருந்தால் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டிருக்கும் என்று சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறி ட்வீட் செய்துள்ளது. இதுகுறித்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நீங்கள் எப்படி எங்களை காணமுடியாமல் வருந்துகிறீர்களோ? அதேபோல, நாங்கள் உங்களை காணமுடியாமல் வருந்துகிறோம்..
ஆய்வாளர்கள் மாற்று மருந்து கண்டுபிடித்து கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவார்கள் என்று நம்புகிறோம்..நாங்கள், மிகவும் வலுவாக மீண்டும் வருவோம் நண்பா..வீட்டில் இருங்கள்.பாதுகாப்பாக இருங்கள்.ஊரடங்கு உங்களது உத்வேகத்தை இழக்கச் செய்யக்கூடாது. மாஸ்டர் விரைவில் உங்களைச் சந்திப்பார்.” என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: மிகவும் வருத்தமாக உள்ளது... மாஸ்டர் குறித்து இயக்குநர் வருத்தம்!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்திரைப்படத்தை இன்று (ஏப்ரல் 9) வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் படத்தை குறித்த தேதியில் ரிலீஸ் செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறி ட்வீட் செய்துள்ளது. இதுகுறித்து எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நீங்கள் எப்படி எங்களை காணமுடியாமல் வருந்துகிறீர்களோ? அதேபோல, நாங்கள் உங்களை காணமுடியாமல் வருந்துகிறோம்..
ஆய்வாளர்கள் மாற்று மருந்து கண்டுபிடித்து கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவார்கள் என்று நம்புகிறோம்..நாங்கள், மிகவும் வலுவாக மீண்டும் வருவோம் நண்பா..வீட்டில் இருங்கள்.பாதுகாப்பாக இருங்கள்.ஊரடங்கு உங்களது உத்வேகத்தை இழக்கச் செய்யக்கூடாது. மாஸ்டர் விரைவில் உங்களைச் சந்திப்பார்.” என்று தெரிவித்துள்ளது.
We miss you, just like how you miss us!
Hoping that a master-mind finds an antidote and put an end to Corona!
We'll come back stronger nanbaa.
Stay home, Stay Safe. #Master #StaySafe pic.twitter.com/MouTeUqlGn
— XB Film Creators (@XBFilmCreators) April 9, 2020
மேலும் படிக்க: மிகவும் வருத்தமாக உள்ளது... மாஸ்டர் குறித்து இயக்குநர் வருத்தம்!