ஸ்டாலினுடன் இணைந்து கொண்ட ரஜினிகாந்துக்கு நன்றி - உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் | ரஜினிகாந்த்

மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்து கொண்ட ரஜினிகாந்துக்கு நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

  காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். அரசியல் கட்சியினர், திரைத்துறை பிரபலங்கள்,கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து சமூகவலைதளங்களில் பேசுபொருளான இச்சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றது.

  உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் விசாரணைகள் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில் இன்று இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ரஜினிகாந்த், “தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” என்று கூறி #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டார்.
  படிக்க: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

  படிக்க: இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை
  ரஜினிகாந்தின் இந்த ட்வீட்டை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தனது அடுத்த பதிவில், “இதை ‘சின்ன இஷ்யூ’வாக நினைக்கும் மனநிலையை மாற்றிக்கொண்டு, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் சட்டப் பணியில் தங்களை உண்மையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு பிரதமர் மற்றும் பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: