போனி கபூர் வீட்டில் வேலை செய்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று
போனி கபூர் மற்றும் அவரது மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றின்றி நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

போனி கபூர் அவரது மகள் ஜான்வி கபூர்
- News18 Tamil
- Last Updated: May 22, 2020, 6:03 PM IST
வலிமை பட தயாரிப்பாளர் வீட்டில் பணியாற்றிய மேலும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர் பாலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளர். இவர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை அந்தேரியில் உள்ள போனி கபூர் வீட்டில் பணியாற்றிய 23 வயதுடைய சரண் சாஹூ என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த போனி கபூர், நானும் எனது மகள்களும் அலுவலக ஊழியர்களும் நலமாக இருக்கிறோம். யாருக்கும் எவ்வித கொரோனா அறிகுறிகளும் இல்லை. ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்தே நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எனினும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். விரைவில் குணமடைந்து சரண் எங்களுடைய வீட்டுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியிருந்தார்.
அவரது வீட்டில் பணியாற்றிய சரண் சாஹூவுக்கு கொரோனா தொற்று உறுதியானவுடன் மற்றவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போனி கபூர் மற்றும் அவரது மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றின்றி நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர் பாலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளர். இவர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை அந்தேரியில் உள்ள போனி கபூர் வீட்டில் பணியாற்றிய 23 வயதுடைய சரண் சாஹூ என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.