வீட்டில் சீரியல் நடிகை மர்மமான முறையில் மரணம் - போலீசார் விசாரணை
விஸ்வசாந்தியின் செல்போனைக் கைப்பற்றிய போலீசார் வீட்டின் எதிரே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிவி நடிகை சாந்தி
- News18 Tamil
- Last Updated: April 11, 2020, 10:13 PM IST
வாடகை வீட்டில் வசித்து வந்த சீரியல் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கு சின்னத்திரை நடிகை சாந்தி என்கிற விஸ்வசாந்தி. சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். ஹைதராபாத் எல்லாரெட்டிகுடா என்ற பகுதியில் உள்ள காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சில நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமலேயே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து எஸ்.ஆர்.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
விஸ்வசாந்தியின் வீட்டுக்கு வந்த போலீசார் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது வீட்டுக்குள் சாந்தி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். பின்னர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விஸ்வசாந்தியின் செல்போனைக் கைப்பற்றிய போலீசார் வீட்டின் எதிரே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விஸ்வசாந்தி விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்றும், நடிப்பதற்காக ஹைதராபாத்தில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த அப்டேட்!
தெலுங்கு சின்னத்திரை நடிகை சாந்தி என்கிற விஸ்வசாந்தி. சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். ஹைதராபாத் எல்லாரெட்டிகுடா என்ற பகுதியில் உள்ள காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சில நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமலேயே இருந்ததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து எஸ்.ஆர்.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
விஸ்வசாந்தியின் வீட்டுக்கு வந்த போலீசார் கதவை உடைத்துச் சென்று பார்த்த போது வீட்டுக்குள் சாந்தி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். பின்னர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த அப்டேட்!