‘உரிமை என்பது இன்னொருவரிடம் கேட்டு வாங்கும் பிச்சை அல்ல’... ‘அண்ணாத்த சேதி’ பாடல் ரிலீஸ்

Youtube Video

துக்ளக் தர்பார் படத்தின் முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார். வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

  96 படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். மேலும் படத்தில் நடிகை மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

  இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கார்த்திக் நேத்தா வரிகளில் ராப் பாடகர் அறிவு இந்தப் பாடலை பாடியுள்ளார். பாடலின் ஆரம்பத்தில், “எங்கேயோ இருந்து வந்த ஒருத்தன் நம்மள ஏமாத்தி, நம்ம இடத்தைப் பிடிச்சு, நம்ம தலை மேல ஏறி உட்கார்ற வரைக்கும் எல்லாமே தன்னால சரியாகிடும்னு நினைச்சு நம்ம சும்மாவே இருந்திருக்கோம். துருப்புடிச்ச மாதிரி.  நம்முடைய உரிமை என்பது இன்னொருத்தன் கிட்ட கேட்டு வாங்குற பிச்சை கிடையாது. அது நம்முடைய இயல்பு. நம்மளோட உரிமையை தடுக்கணும்னு நினைச்சா தடுக்குறவன் மூஞ்சிய விட்டுட்டு அவன் மூளைய அடிச்சு உடைக்கணும். அப்போதான் அடுத்து வர்றவணுக்கு அப்படி யோசிக்கணும்னு எண்ணமே வராது. எப்போதுமே மெயின் ஸ்விட்ச் தான் மஸ்ட்” என்று விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
  Published by:Sheik Hanifah
  First published: