கொரோனா எதிரொலி : மகனை நினைத்து மனவருத்தத்தில் விஜய்?
ஃபிலிம் மேக்கிங் படித்து வரும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ’ஜங்ஷன்’ சிரி, உள்ளிட்ட ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் மற்றும் அவரது மகன்
- News18 Tamil
- Last Updated: April 13, 2020, 8:10 PM IST
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் நடிகர் விஜய் வெளிநாட்டிலிருக்கும் தனது மகனை நினைத்து மன வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை இந்தியாவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு, தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான துறைகள் முடங்கியுள்ளன. திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பெஃப்சி ஊழியர்கள், துணை நடிகர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடிகர் விஜய்யிடம் இருந்து உதவிகள் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவர் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படித்துவரும் தனது மகன் ஜேசன் சஞ்சயை நினைத்து வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் ஜேசன் சஞ்சய் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்நாட்டில் ஜுன் 1-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: விஜய் - அஜித் ரசிகர்களின் அநாகரீக பதிவுகள்...! கடுமையாக சாடிய விவேக்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இதுவரை இந்தியாவில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு, தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான துறைகள் முடங்கியுள்ளன. திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பெஃப்சி ஊழியர்கள், துணை நடிகர்களுக்கும் உதவி செய்து வருகின்றனர்.