
சுஜிதா
தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் தான் சுஜிதாவுக்கு முதல் சீரியல்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா தனுஷ்.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

சின்னத்திரையைப் பொறுத்தவரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் தான் சுஜிதாவுக்கு முதல் சீரியல்.

அதன் பிறகு பல திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.

ஹரிச்சந்தனம் என்ற சீரியலில் “உன்னிமயா” என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம், கேரளாவில் மிகவும் பிரபலமானார் சுஜிதா.

சத்யராஜ், சிரஞ்சீவி, கார்த்திக், கே.ஆர்.விஜயா உள்ளிட்டவர்களின் படங்களில் குழந்தை நடசத்திரமாக நடித்துள்ளார்.

1983-ல் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரமும் இவர் தான்.

1987 மற்றும் 1988-ல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி அவார்டையும் பெற்றிருக்கிறார்.

சுஜிதாவின் கணவர் தனுஷ். விளம்பர பட இயக்குநர்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் வரவேற்பை பலமாக பெற்றுள்ளார்.
Published by:Shalini C
First published: