TELEVISION SUN TV ROJA IS MY LAST SERIAL ARJUN SIBBU SURYAN SHOCKS FANS SCS
Sun TV Roja: ’ரோஜா என்னோட கடைசி சீரியல்’ - அதிர்ச்சி கிளப்பும் அர்ஜூன்
சிபு சூர்யன்
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியல் தான் நடிக்கும் கடைசி சீரியல் என அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அதில் அர்ஜூனாக நடித்து வரும் சிபு சூரியன் பகீர் கிளப்பியுள்ளார்.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியல் தான் நடிக்கும் கடைசி சீரியல் என அதிர்ச்சி கிளப்பியுள்ளார் அதில் அர்ஜூனாக நடித்து வரும் சிபு சூரியன் பகீர் கிளப்பியுள்ளார்.
தொலைக்காட்சி நடிகர் சிபு சூர்யன், தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்வதில் தயங்காதவர். அவர் தற்போது ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்திருக்கும் பேட்டியில், தான் நடித்து வரும் ரோஜா சீரியல் தான், தனது கடைசி சீரியலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சன் டிவி-யில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் ரோஜா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. “இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் ரோஜா, தொலைக்காட்சியில் எனது கடைசி சீரியலாக இருக்கும். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நான் இதில் நடித்து வருகின்றேன். இப்போது OTT மற்றும் படங்கள் போன்ற மற்ற தளங்களில் வெவ்வேறு வேடங்களில், கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன். நான் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய போது, நான் ஒரு சராசரி நடிகராக இருந்தேன். இப்போது, நிறைய மேம்பட்டுள்ளேன். தொலைக்காட்சி சீரியல்களில் பணிபுரியும் போது நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நிச்சயமாக, படங்கள் ஆபத்தானவை, சவால்கள் நிறைந்தவை என எனக்குத் தெரியும். ஆனால் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” என்றார்.
மேலும் தொடர்ந்த சிபு, “இசையமைப்பாளர்-இயக்குனர் ஹம்சலேகா இயக்கும் சகுந்தலா என்ற கன்னட படத்தில் இப்போது நடித்து வருகிறேன். இதில் ஒரு ’கிரே’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மேலும் புகழ்பெற்ற ஒரு குழுவினருடன் தமிழிலும் நடிக்கிறேன். இப்போது அது தொடர்பான எந்த விவரங்களையும் வெளியிட எனக்கு அனுமதி இல்லை. ஆனால் நான் படத்தில் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறேன் என்பதை மட்டும் சொல்ல முடியும்” என்ற குறிப்பையும் கொடுத்துள்ளார்.