சிந்தனைகள் சிம்பிளிபைடு: ஆன்ட்ரியா கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிந்தனைகள் சிம்ளிஃபைடு நிகழ்ச்சியில் ஆன்ட்ரியாவின் கேள்விகளுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பதிலளிக்கிறார்.

  • Share this:
கொரோனா காலகட்டத்தை ஓரளவுக்கு சுமை குறைந்ததாக தனது பார்வையாளர்களுக்கு ஆக்கவேண்டும் மற்றும் புதிய மற்றும் புத்தாக்கமான நிகழ்ச்சிகளின் மூலம் அவர்களை ஈடுபாடுகொள்ளச் செய்யவேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் 'சிந்தனைகள் சிம்ளிஃபைடு'  என்ற பெயரில் தி ஆர்ட் ஆஃப் லிவ்விங் அறக்கட்டளையின் ஒத்துழைப்போடு உரையாடல் அடிப்படையிலான டாக் ஷோ நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் வழங்குகிறது.

இதயத்திற்கு இதயம் உரையாடுகின்ற, உத்வேகத்தை உயர்த்துகின்ற ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருக்கும் இது, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. ஆர்ட் ஆஃப் லிவ்விங் ஃபவுண்டேஷனின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபல தமிழ் ஆளுமைகளோடு இந்நிகழ்ச்சியில் மனம்திறந்து உரையாடவிருக்கிறார்.அந்த வரிசையில் நாளை, நடிகை ஆன்ட்ரியாவுடன் , ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உரையாடவிருக்கிறார். இதில், ஆன்ட்ரியாவின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கிறார். அதற்கான புரமோ வீடியோவை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
வாழ்க்கை, உறவுகள், அனைவரையும் உள்ளடக்குவது, குடும்பம், அன்பு, காதல், வெற்றி, உடல்நலம், மனநலம், ஆன்மீகம், சிரமமான நேரங்களில் நம்பிக்கை மற்றும் தைரியம் ஆகியவை குறித்து நேர்மையான மற்றும் சிந்தனைகளை தூண்டுகின்ற உரையாடலில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் மனதில் ஆக்கப்பூர்வ, நேர்மறையான எண்ணங்களை மனதில் ஆழமாக பதியவைப்பதே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பங்கேற்கும் “சிந்தனைகள் சிம்ளிஃபைடு” என்ற பெயரிலான இந்த டாக் ஷோவின் நோக்கமாகும்.

 
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading