சொந்த வீட்டில் திருட்டு... சின்னத்திரை நடிகையை தேடும் போலீஸ்

சொந்த வீட்டில் நகை திருடியதாக சின்னத்திரை நடிகையின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • Last Updated: September 15, 2020, 5:55 PM IST
  • Share this:
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சுசித்ரா.

தற்போது ‘அரண்மனைக்கிளி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்து வரும் அவர், மாமனார் வீட்டில் இருந்த நகைகளை திருடச்சொல்லி கணவரை போலீசில் சிக்க வைத்துள்ளார். கணவர் கைதான நிலையில் தலைமறைவாக உள்ள நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.

சொந்த வீட்டிற்குள்ளேயே கணவரை திருட்டில் ஈடுபட வைத்தது ஏன்?


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு ஊரைச் சேர்ந்தவர் 55 வயதான தேசிங்கு; இவர் சமையல் வேலை பார்த்து வருகிறார். சனிக்கிழமை அன்று தேசிங்கு தனது வீட்டைப் பூட்டி விட்டு, பூ அரும்பு பறிக்க சென்றார். திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தன.

தேசிங்கின் புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தியபோது தேசிங்கின் மகன் மணிகண்டனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்தனர். அவரைப் பிடித்து விசாரித்த போது அவர் தான் நகை, பணத்தை திருடினார் என்பது அம்பலமானது. கார் ஓட்டுநரான மணிகண்டன் தனது மனைவியை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வந்தார்.

அதன்பின், அரண்மனைக்கிளி, தெய்வமகள் ஆகிய நாடகங்களில் நடித்து வரும் துணை நடிகை பரமேஸ்வரி என்ற சுசித்ராவைத் திருமணம் செய்து சென்னையில் வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கால், சுசித்ராவுக்குப் நாடகங்கள் படப்பிடிப்பு இல்லை. மணிகண்டனுக்கும் கார் ஓட்டும் பணி கிடைக்கவில்லை.கடும் பண நெருக்கடியில் சிக்கிய மணிகண்டனுக்கு அவரது தந்தை வீட்டில் உள்ள நகைகளைத் திருடலாம் என சுசித்ரா யோசனை கொடுத்துள்ளார். மேலும் தனது நடிப்பு வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதையறியாத மணிகண்டன், சனிக்கிழமை அன்று தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில், நகை, பணத்தை திருடி பண்ருட்டியில் உள்ள பிரபல நகைக் கடையில் விற்றுள்ளார்.

நகைகளையும் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தையும் மீட்ட போலீசார் மணிகண்டனைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சின்னத்திரை நடிகை சுசித்ராவைத் தேடி வருகின்றனர்.கொரோனா நெருக்கடி என்று காரணம் கூறி தன் தந்தை வீட்டிலேயே மகன் திருடிய சம்பவம் மாளிகைமேடு கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: September 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading