19 வயது கதாபாத்திரத்துக்காக கடினமாக உழைத்த சூர்யா - சூரரைப் போற்று மேக்கிங் வீடியோ
இத்திரைப்படத்தின் கதை 1977, 83, 1990 மற்றும் 2000 ஆகிய காலகட்டத்தில் நடக்கிறது. நடிகை அபரணா பாலமுரளி இந்தப் படத்துக்காக சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- News18 Tamil
- Last Updated: April 15, 2020, 8:14 PM IST
சூரரைப் போற்று திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் இயல்பு நிலை திரும்பிய பின்னர் இந்தப் படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் 19 வயது கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா கடினமாக உடற்பயிற்சி செய்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 3 நிமிடம் 50 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ யூடியூப் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
இத்திரைப்படத்தின் கதை 1977, 83, 1990 மற்றும் 2000 ஆகிய காலகட்டத்தில் நடக்கிறது. நடிகை அபரணா பாலமுரளி இந்தப் படத்துக்காக சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் இயல்பு நிலை திரும்பிய பின்னர் இந்தப் படம் திரைக்கு வர உள்ளது.
இத்திரைப்படத்தின் கதை 1977, 83, 1990 மற்றும் 2000 ஆகிய காலகட்டத்தில் நடக்கிறது. நடிகை அபரணா பாலமுரளி இந்தப் படத்துக்காக சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.