சூரரைப்போற்று படத்தின் ‘காட்டுப்பயலே’ பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ்

Youtube Video

சூரரைப்போற்று படத்தின் ‘காட்டுப்பயலே’ பாடல் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 • Share this:
  சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

  இநஇந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காட்டுப்பயலே’பாடலின் ஒரு நிமிட வீடியோவை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிட்ட படக்குழு இன்று லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள இந்தப் பாடலை பின்னணி பாடகி தீக்‌ஷிதா வெங்கடேஷன் பாடியுள்ளார்.  கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர வேண்டிய சூரரைப்போற்று திரைப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. இயல்புநிலை திரும்பி திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
  Published by:Sheik Hanifah
  First published: