லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த அப்டேட்!
”படத்தைத் தயாரிப்பதோடு இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்”

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
- News18 Tamil
- Last Updated: April 11, 2020, 6:05 PM IST
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கைதி’ படத்துக்கு பின்னர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ஊரடங்கால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிலைமை சீரடைந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகவிருப்பதாக தகவல்கள் கசிந்தன. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி இந்தப் படத்துக்கான திரைக்கதை பணிகளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு இதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் கமல் – ரஜினி கூட்டணி 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணையவுள்ளனர்.
மேலும் படிக்க: ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கி மார்ஃபிங் புகைப்படங்கள் : அனுபமா அப்செட்!
‘கைதி’ படத்துக்கு பின்னர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இத்திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் ஊரடங்கால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிலைமை சீரடைந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகவிருப்பதாக தகவல்கள் கசிந்தன. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் பேசப்பட்டது.