சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி 2... சஸ்பென்ஸ் உடைத்த லாரன்ஸ்
சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது அதிர்ஷ்டம் - ராகவா லாரன்ஸ்

சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த்
- News18 Tamil
- Last Updated: April 9, 2020, 8:25 PM IST
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை உறுதி செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ், என்னுடைய அடுத்த படங்களில் ஒன்று சந்திரமுகி 2. நான் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தை இயக்குநர் பி.வாசு இயக்குவதாகும் சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிப்பதாகவும் கூறியுள்ள லாரன்ஸ், படத்துக்காக தான் பெற்ற முன் பணத்திலிருந்து ரூ.3 கோடியை கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காகவும், வாழ்வாதாரத்தை இழந்துவாடும் தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும், நடன இயக்குநர்கள் சங்கத்தினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு நிதியுதவி அளித்துள்ளார்.
மேலும் படிக்க: கொரோனா பாதிப்பு : வாழ்வாதாரத்தை இழந்த நடிகர்களுக்கு யோகி பாபு உதவி
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது.