உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும் - மாஸ்டர் பட பிரபலத்துக்கு ப்ரியா அட்லீ பதில்!
ஏ ஃபார் ஆப்பிள் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட இருப்பதாக அட்லீ அறிவித்திருந்தார்

இயக்குநர் அட்லீ அவரது மனைவி ப்ரியா அட்லீ
- News18 Tamil
- Last Updated: April 12, 2020, 6:45 PM IST
தனக்கு வாழ்த்துச் சொன்ன மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரிடம் உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும் என்று இயக்குநர் அட்லீயின் மனைவி பதிலளித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பிகில். விஜய், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அடுத்து ஷாரூக்கான் நடிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவர் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் ஏ ஃபார் ஆப்பிள் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட இருப்பதாக அட்லீ அறிவித்திருந்தார். இதற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறினர். 
அந்தவகையில் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்தார். அதற்கு அட்லீயின் மனைவி ப்ரியா, ''நீங்கள் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது'' என பதிலளிக்க, 'ரொம்ப சந்தோஷம், ஆனா அப்படிலாம் இல்ல' என ஜெகதீஷ் கூறினார். இதை பார்த்த ப்ரியா அட்லீ, 'உண்மைகள் சில நேரம் கசக்கதான் செய்யும் பிரதர்' என்று பதிலளித்திருக்கிறார்.
மேலும் படிக்க: திருமண வீடியோ பதிவிட்ட பிரேம்ஜி - அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்!