காதலித்து ஏமாற்றியதாக நடிகை ஷனம் ஷெட்டி புகாரில் பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது வழக்குப் பதிவு

  • Share this:
இரண்டு ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயம் செய்யிக்கப்பட்ட நிலையில் , திருமணம் செய்ய மறுத்ததாக , நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் , நடிகர் தர்ஷன் மீது சென்னை அடையாறு மகளிர் காவல்நிலையத்தில் , பெண் வன்கொடுமை சட்டம், மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தர்ஷன் மீது புகார் அளித்தார்.


அதில், நடிகர் தர்ஷன் , தானும் காதலித்து வந்தாகவும், 2019 மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்தாகவும்,2019 ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் சினிமா நடிகர்களையும் தன்னையும் இணைத்து தவறாகக் கூறி திருமணத்தை நிறுத்தியதாகவும் இதனால் தன்னுடைய குடும்பமே மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

மேலும் திருமணத்தை நிறுத்தியது ஏன் எனக் கேட்டதற்கு என்னுடைய வழியில் குறுக்கே வரக்கூடாது எனவும் மீறி வந்தால் சமூக வலைத்தளத்தில் , தன்னை பற்றி அவதூறு பரப்பிவிடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

பிக் பாஸுக்கு தர்ஷனை அனுப்ப விண்ணப்பம் அனுப்பியது முதல் அவர் புகழ் பெற்றது வரை தனக்கு பங்கு உண்டு எனவும், அவர் தேவைக்காக 15 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும், தன்னுடன் உடல் ரீதியாக உறவு வைத்து கொண்டு , தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக புகாரில் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.


இதனைத் தொடர்ந்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் பிக் பாஸ் தர்ஷன் மீது 294(பி)- ஆபாசமாக பேசுதல், 506-மிரட்டல், 420- மோசடி, 354- பெண்ணை மானபங்கப்படுத்துதல் என நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
First published: October 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading